விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு.. 20 பேர் பலி!!
யேமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமர் மெய்ன் அப்துல்மாலிக், யேமனுக்கான சவுதி தூதர் முகமது சையத் அல்-ஜாபர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், காயமடைந்தவர்கள் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் உள்ள பல்வேறு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்.
வெடிகுண்டு விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் விமான நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலையச் செய்யவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக யேமன் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.