மூட்டு வலியைப் போக்கும் தைலம்..! தயாரிக்கும் முறை

பொதுவாக வயது மூப்பு காரணமாக பெரியவர்களுக்கு மூட்டு வலி ஏற்படும். இவர்களில் மூட்டில் ஏற்படும் தேய்மானம் காரணமாக இந்த வலி ஏற்படுகிறது. நீண்ட தூரம் நடக்கவும், மாடிப் படி ஏறவும் இவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
இந்த மூட்டு வலிக்கு வேப்ப எண்ணெய்யில் தைலம் தயாரித்து தேய்த்தால் நன்றாக கேட்கும். அதனை எப்படி தயாரிக்கலாம் எனப் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
வேப்ப எண்ணெய் – 250மிலி
கிச்சிலி கிழங்கு – 50 கிராம்.
பொதுவாக வேப்ப எண்ணெய் உடல் வலியைப் போக்கும். மேலும் எழும்புகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அகண்ட இரும்பு கடாயில் 250 மிலி வேப்ப எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும்.
பின்னர் கிச்சிலி கிழங்கை நன்றாக இடித்து சூடேரிய எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொறிக்க வேண்டும். எண்ணெய் நன்கு ஆறியபின்பு அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் உற்றிவைத்துக்கொள்ளவும்.
மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் கீழிருந்து மேல்நோக்கி இந்த தைலத்தை தடவ வேண்டும். தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் இதை தடவி வந்தால் வலி குறைவதை நன்றாகவே உணரமுடியும்.