பாஜக மாநிலத் தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!

அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. அணி பிரசார பிரதிநிதிகள் மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன், பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் வாசுதேவன், வேலூர் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில் எஸ்.பி. விஜயகுமார், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர் உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.