பள்ளிகள் திறக்க மீண்டும் கருத்து கேட்பு : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று இன்று முதல் கருத்து கேட்கப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு கோபிசெட்டிபாளையதில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும். மாணவர்கள் – பெற்றோர்களிடம் இந்த வாரம் இறுதிவரை கருத்து கேட்கப்படும். பள்ளிகள் திறந்த உடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
ஏற்கெனவே, பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இதன் அடிப்படையில் முடிவு எடுத்தாக கூறப்பட்டது. அதேபோல மீண்டும் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்கப்படவுள்ளது.