தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி? – எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்!

கொரோனாவை கட்டுப்படுத்தாமல் இந்தியாவில் தியேட்டர்களை திறக்க கூடாது என அமெரிக்கவைச் சேர்ந்த பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ், ” இந்திய திரையரங்குகளில் மிகக் குறைவான காற்றோட்ட வசதி, இறுக்கமாக மூடப்பட்டதாக, மக்கள் கூட்டம் நிறைந்ததாக இருக்கின்றன. கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தாமல் திரையரங்குகளை திறக்கக் கூடாது. எனவே, திரையரங்குகள் திறப்பதை தவிர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்தியாவில் 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதி சரியானதா என ட்விட்டரில் ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும்போது இதை தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x