ரூம் ஹீட்டரிலிருந்து கசிந்த கார்பன் மோனாக்சைடு.. மூன்று பேர் பலி..?

ஜம்மு காஷ்மீரில் ரூம் ஹீட்டரிலிருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்ததால், தூக்கத்திலேயே ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்தனர்.

ஜம்மு_காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் ஒரு தம்பதியரும், அவர்களது ஐந்து வயதுமகனும் இன்று காலை தங்கள் வீட்டிற்குள் மயக்க நிலையில் கிடந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக  உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

“முகமது மக்பூல் லோன், அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் தூங்கும்போது இறந்துவிட்டனர். முதற்கட்ட விசாரணைபடி அறையிலிருந்த ரூம் ஹீட்டரிலிருந்து வெளிப்பட்ட கார்பன் மோனாக்சைடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் இறந்தனர்  என்பது தெரியவந்துள்ளது” என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x