1700 கோடி ரூபாய் ஊழல்.. விஷ ஊசி போட்டு மரண தண்டனை..?
சீனாவின் மிகப்பெரும் கடன் வழங்கும் ஹூராங் சொத்து மேலாண்மை வங்கியின் தலைவராக இருந்தவர் லாய் சியாமின். அவர் பல்வேறு விதமான நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.
சீன அரசு நடத்திய விசாரணையில் அவர் 1700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்து உள்ளது. கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லாய் சியாமின் கடந்த் 2018 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சீனாவின் டியான்ஜின் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் லாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அவருக்கு விஷ ஊசி போட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். சீனாவின் மிகவும் ஊழல்வாதியான நிதித்துறை அதிகாரி என அழைக்கப்படும் இவர் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்கு பெரும் ஆபத்து விளைவித்தார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.