துபாய்க்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

துபாய்க்கு வரும் பயணிகள், கொரோனா இல்லை என்பதற்கான, பி.சி.ஆர். டெஸ்ட் ரிசல்ட்டை கொண்டு வருவது அவசியம் என, துபாய் விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
துபாய், சர்வதேச விமானப் போக்குவரத்தை கடந்த ஜூன் மாதம் திறந்து விட்டது. துபாய்க்கு வரும் பயணிகள், முன்கூட்டியே பி.சி.ஆர் கொரோனா டெஸ்ட் அறிக்கையை எடுத்து வருவது அவசியமில்லை என அந்நாட்டு அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், துபாய்க்கு வரும் அனைத்து விமான பயணிகளும் கட்டாயமாக தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை, புறப்படுவதற்கு, 96 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நோய் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் (PCR) முறை மூலமாகவே இந்த சோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யப்பட்டு, கொரோனா நெகட்டிவ் என்று வந்த அறிக்கையை கையில் வைத்திருக்க வேண்டும்.
பயணிகள் துபாய்க்கு வந்தபின், மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். இதன்மூலம், இடைப்பட்ட நான்கு நாட்களுக்குள், பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனரா என்பதை கண்டறியலாம் என்று துபாய் அரசு தெரிவித்துள்ளது.