அதிகரித்தது கொரோனா… தலைநகரில் அவசர நிலை பிரகடனம்!
ஜப்பான் நாட்டில், கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் ஒரு மாத கால அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் ஜப்பானில் 7,000 பேரும், டோக்கியோ நகரில் மட்டும் 2447 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது அந்நாட்டில் பரவி வருவது, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பாகும்.
‘மூன்றரை கோடி பேர் வசிக்கும் டோக்கியோ நகரில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்துள்ளது, மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்’ என்கின்றனர் அதிகாரிகள்.
அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வர்த்த நிறுவனங்கள், சினிமா தியேட்டர்களை மூடவும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கவும் வசதியாக, இந்த அவசர நிலை உத்தரவை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது.