மேலும் அணு ஆயுதங்கள்.. வடகொரியா அச்சுறுத்தல்
வருங்காலத்தில் மேலும் பல அணு ஆயுதங்களை உருவாக்குவோம்’ என்று வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் தெரிவித்துள்ளார்.
‘தங்கள் நாட்டின் மீதான விரோதப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் தான் உறவு மேம்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், ‘அமெரிக்கா தான் முக்கிய எதிரி. எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் தவிர, மற்றபடி முதலில் நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உருவாக்கி வரும் நவீன ஆயுதங்களின் பட்டியலையும் கிம் வெளியிட்டார். பல முனைகளில் ஆயுதம் ஏந்துச் செல்லும் ஏவுகணைகள், நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், நீண்ட தொலைவுகள் ஏவுகணைகள், உளவு செயற்கைக்கோள்கள் ஆகியவற்றை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.