வேளான் சட்டங்களை நிறுத்த முடியுமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவது தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இதில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதே தங்களுக்கு தெரியவில்லை. விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் கடும் குளிர் சுகாதார பிரச்சனையினால் உயிரிழந்து வருகிறார்கள் இவற்றை மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும். 

ஏதேனும் பொறுப்புணர்வு இருந்தால் சட்டங்களை அமல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி விடுகிறோம் என நீங்கள் கூறினால் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நாங்கள் குழு அமைக்கிறோம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கானது என கூறுகிறீர்கள் ஆனால் இந்த சட்டங்கள் எங்களுக்கு பலன் அளிக்கிறது என ஏன் ஒருவர் கூட இதுவரை உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவில்லை. என்றாவது ஒருநாள் அமைதிப் போராட்டம் வேறு மாதிரியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எங்கள் கைகளில் ரத்தக்கரை படிய நாங்கள் விரும்பவில்லை. 

விவசாய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீங்கள் முடிவெடுக்கிறீர்களா அல்லது நாங்கள் அந்த உத்தரவை பிறப்பிக்கவா என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x