காதல் மன்னன் காசி மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்!

தமிழகம் முழுவதும் பல பெண்களிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகி ஏமாற்றி பண மோசடி செய்த வழக்குகளில் கைதாகியுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி தொடர்பான வழக்கில் இன்று சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாகவும், நகை மற்றும் பணம் பறித்ததாக பதிவு செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காசி மீது பதியப்பட்ட 7 வழக்குகளில் கந்துவட்டி வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.