பொங்கல் பரிசை மிஸ் பண்ணிட்டீங்களா? கவலை வேண்டாம்

ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனை பெறுவதற்கான கடைசி தேதி ஜன., 13-லிருந்து, ஜன 25-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசுத் தொகுப்பானது தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்படுகிறது. அரிசி பெறக் கூடிய அட்டைதாரா்கள் 2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 805 பேருக்கும், இலங்கைத் தமிழா்கள் 18 ஆயிரத்து 923 குடும்ப அட்டைதாரா்களுக்கும், அரிசி அட்டைகளாக மாற்றப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரத்து 235 அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 13ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 

கொரோனா சூழலால் காலை, மாலை 100 பேர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அனைவரும் விடுபடாமல் பரிசுத் தொகுப்பை பெறும் விதமாக கடைசி தேதி ஜன., 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x