நாயை போலவே கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் வாக்கிங் சென்ற பெண்..?
கனடாவின் கியூபெக் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இரவு 8 முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளிவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு சில விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பணியாளர்கள் பயணம் மேற்கொள்ளவும், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் வாக்கிங் செல்லவும் இந்த ஊரடங்கு நேரத்தில் தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்தான் அந்த நகரில் உள்ள ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவருடன் ஊரடங்கு நேரத்தில் வாக்கிங் சென்றுள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் செல்லமாக வீட்டில் வளர்க்கும் நாயை போலவே அவரது கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் வாக்கிங் சென்றுள்ளார் அந்த பெண். அப்போது போலீசார் பிடித்து கேள்வி கேட்டுள்ளனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் வாக்கிங் செல்லலாம். அதைதான் நான் செய்கிறேன் என அந்த பெண் சொல்லியுள்ளார்.
Wife walked her husband on a leash and claimed that she was ‘walking her dog’. She told the cops that walking pets was allowed during the curfew hours in Canada.?
— Khushboo (@Khush_boozing) January 12, 2021
அரசின் அறிவிப்பை மீறியமைக்காக தம்பதியர் இருவர் மீதும் விதிமுறை மீறலுக்கான வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எப்படியும் அபாராதத் தொகை இந்திய மதிப்பில் 3.44 லட்சத்தை தாண்டும் எனவும் சொல்லப்படுகிறது.