அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து!!
வங்கதேச அகதி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 550 வீடுகளும், 150 கடைகளும் எரிந்து நாசமாகின.
மியான்மர் எனப்படும் பர்மாவில் அரசு ஆதரவு குழுக்களின் துன்புறுத்தல் காரணமாக, ரோஹின்கியா இஸ்லாமியர்கள், அகதிகளாக வெளியேறி, வங்கதேச முகாம்களில் தங்கியுள்ளனர்.
இதில், காக்ஸ் பஜார் மாவட்டத்தில் இருக்கும் அகதி முகாம் ஒன்றில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த முகாமில், 3500 அகதிகள் தங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, மாற்று குடியிருப்பு அமைப்பதற்கான பொருட்கள், உடைகள், உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டதாக, ஐ.நா., அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.