முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை..??
தாய்லாந்தின் சா்ச்சைக்குரிய அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ் இத்தனை அதிக ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
சமூக வலைதளத்தில் தாய்லாந்து முடியாட்சியை விமா்சித்து அந்தப் பெண் பதிவுகள் வெளியிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாங்காக் குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கடுமையான தண்டனையை விதித்துள்ளது.
நாட்டில் ஜனநாயகத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின்போது, முடியாட்சிக்கு எதிரான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன. அத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.