காணாமல் போன உலக பணக்காரர் மீண்டும் வந்தார்!
சீன அரசுடனான கருத்து வேறுபாட்டால் அச்சுறுத்தலுக்கு ஆளான மிகப்பெரும் கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார்.
அமேசான், பிளிப்கார்ட் போன்று அலிபாபா என்ற ஆன்லைன் வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நாட்டில் இந்நிறுவனம் சக்கை போடு போடுகிறது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், சீன அரசின் வங்கி மற்றும் நிதி கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஜாக் மா விமர்சித்திருந்தார்.
இதனால் சீன கம்யூனிச அரசு கோபமடைந்தது. கடந்தாண்டு அக்.க்குப் பின் ஜாக் மா எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. சமூக ஊடகங்களிலும் பதிவுகள் இடவில்லை. இதனால் அவரை சீன அரசு ஏதோ செய்துவிட்டது என்று ஊகங்கள் எழுந்தன. இது அரசுக்கு நெருக்கடியை தந்தது. இந்நிலையில் 100 ஆசிரியர்களுடன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் ஜாக் மா ஆலோசனை நடத்தும் ‘வீடியோ’ வெளியாகி உள்ளது.