இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
லஞ்ச ஊழல், முறைகேடு புகார்களுக்கு ஆளான பிரதமர் பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள ஜெருசலேம் சதுக்கம் அருகே நடந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாட்டின் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம், இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இது, இரண்டு ஆண்டுகளில் நடக்கும் நான்காவது தேர்தலாகும்.
கொரோனா தொற்று பாதிப்பை அரசு கையாண்ட விதமும், போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொந்தளித்த இஸ்ரேல் மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.