போராட்டம் வெடித்தது ரஷ்யாவில் 2000 பேர் கைது
ரஷ்யாவில், அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாஸ்கோ நகரின் மையமான புஷ்கின் சதுக்கத்தில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அரசை விமர்சனம் செய்து வந்த எதிர்க்கட்சி பிரமுகர் அலெக்சி நாவல்னி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியும் இந்த போராட்டங்கள் நடந்தன.
இதில் ஈடுபட்ட நாவல்னியின் மனைவியும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். போராட்டக்காரர்களில் பலர், அதிபரின் மாளிகையான கிரெம்ளின் நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர்.
அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். மாஸ்கோ மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு தொலைதுார பகுதிகளிலும் இந்த போராட்டம் நடந்ததாக, நாவல்னி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.