பாத வெடிப்பு நீங்க இதோ இயற்கை வழி டிப்ஸ்!!

உங்கள் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தைப்பட்டு வந்தால் வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால் மட்டும் போதும் சரியாகிவிடும். 
பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான முக்கிய காரணம் பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே. வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். 

வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு (Soap) போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். இவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும். 

பாதம் வேறொரு நிறத்தில் உள்ளதா? இதை படிக்கவும். 

இது போன்று பாத வெடிப்புகளால் ( Cracked heels) அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும் குணமாகாது. இதற்கான தீர்வு இயற்கை தாவரம் பழத்தை பயன்படுத்தி அடிக்கடி பாதத்தில் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும். 

பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். 

பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்தால் பாதம் வெடிப்பு நீங்கிவிடும். 

பப்பாளி (Papaya) பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். 

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். 

பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x