கொரோனாவை தடுக்காததால் ராஜினாமா முடிவெடுத்த பிரதமர்!
கொரோனாவால் மோசமான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்த நாடு இத்தாலி. தற்போது அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே கொரோனாவை சரியாக நிர்வகிக்காத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இத்தாலியில் கொரோனா தொற்று 85,000-க்கும் அதிகமான மக்களை பலிகொண்டுள்ளது. பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே காரணம் என அந்நாட்டு அரசியலில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் பிரதமர் மேட்டியோ ரென்சியின் விவா கட்சி, கடந்த வாரம் அதனை வாபஸ் பெற்றது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வேண்டியதாகிப் போனது. அப்போது நூலிழையில் ஆட்சியை காப்பாற்றினார் பிரதமர்.
ஆனால் மேலவையில் பெரும்பான்மையைப் பெறத் தவற விட்டார். இதனால் அவரது அரசாங்கம் கடுமையாக பலவீனமடைந்தது. இதன் மூலம் அரசாங்கம் கவிழும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தானே ராஜினாமா செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனை அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. விரைவில் அமைச்சர்களுக்கு அறிவிப்பார் என்று தெரிவிக்கின்றனர்.