டொனால்ட் டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்படுவாரா..?
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்குத் தேவையான போதிய பலம் செனட் சபையில் குடியரசுக் கட்சியினருக்கு இல்லாததால், அவா் அந்த சபையால் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
பதவி நீக்க விசாரணைக்குப் பிறகு ஒருவரை குற்றவாளியாக அறிவிப்பதற்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.
100 இடங்களைக் கொண்ட செனட் சபையில், குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் தலா 50 இடங்கள் உள்ளன.
எனவே, டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கு குறைந்தது 17 குடியரசுக் கட்சி எம்.பி.க்களின் ஆதரவாவது ஜனநாயகக் கட்சிக்குத் தேவை.
எனினும், பதவி நீக்க விசாரணையை எதிா்க்கும் ராண்டல் பாலின் தீா்மானத்துக்கு எதிராக 5 குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனா். ஏனைய அனைவரும் டிரம்ப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கடைப்பிடித்தனா்.
எனவே, பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் டிரம்ப் விடுவிக்கப்படுவாா் என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.