அமெரிக்காவில் ஒரே நாளில் 4300 பேர் கொரோனாவுக்கு பலி
அமெரிக்காவில், கடந்தாண்டு ஜனவரி முதல் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும், 4,300 பேர் பலியாகியுள்ளனர்.
எனினும், நாட்டில் ஒட்டு மொத்தமாக, புதிதாக தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. தடுப்பூசி போடுவதன் காரணமாகவும் தொற்று குறைந்து வருகிறது.
நியூ ஜெர்சி மாநில ஆளுநர் பில் மர்பி கூறுகையில், ‘இப்போது தான் சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இரண்டரை கோடிப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், நேற்று வரை 4 லட்சத்து 25 ஆயிரத்து 120 பேர் நோயால் உயிரிழந்துள்ளனர். உலகின் அதிகப்படியான உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.