ரயில் மீது கற்களை வீசி போராட்டம்.. பாமகவினரால் பரபரப்பு..!

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி போராட்டம் நடத்தவுள்ளதாக பாமகவினர் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் நேற்று கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாமகவினர் சாலை மறியலால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெருங்களத்தூரில் பாமகவினர் ரயிலை மறித்து கற்களை வீசி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ள்னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பா.ம.க.வினரை சென்னை எல்லையில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துவருகின்றனர்.