‘பிளாஸ்டிக்’ பயன்படுத்தி, 1 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலை

நம் நாடு, தினமும், 25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதில், 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள், சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம் என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டது. ஒரு கி.மீ., சாலை அமைக்க, 9 டன், ‘தார்’ மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவு பயன்படுத்தினால், 30 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, 11 மாநிலங்களில், 1 லட்சம் கி.மீ., சாலை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018ல், ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி, சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தியது. இதேபோல், ஜம்மு – காஷ்மீரில், 270 கி.மீ., சாலை அமைக்க, பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x