மஹாராணி தடை செய்த ஆவணப்படம் ‘ரிலீஸ்’
பிரிட்டீஷ் மஹாராணி எலிசபெத்தால், 50 ஆண்டுக்கு முன் தடை செய்யப்பட்ட ஆவணப்படம், தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
பிபிசி நிறுவனத்தால், 1969ம் ஆண்டு தயார் செய்யப்பட்ட ‘அரச குடும்பம்’ (ராயல் பேமிலி) என்ற அந்த ஆவணப்படம், பிரிட்டீஷ் அரச குடும்பம் பற்றியும், மஹாராணி பற்றியும் பல்வேறு புதிய தகவல்களை உலகுக்கு சொல்லும் வகையில் இருந்தது.
அரச குடும்பத்தினரின் அன்றாட நடவடிக்கைகள், அவர்களது உரையாடல் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த படம் வெளியாகும் முன், அதை பார்த்த மஹாராணி, அதை வெளியிடக்கூடாது என்று தடை செய்து விட்டார்.
இவ்வளவு காலத்துக்கு பிறகு, அந்த படம், திடீரென யூடியூபில் வெளியாகியுள்ளது. அந்த படத்தை பெற்ற சிலர், ரகசியமாக யூடியூபில் பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், யூடியூபில் இருந்து அதை நீக்கினர்.