“நிதியாண்டு பட்ஜெட், அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்களாகவே இருக்கிறது” – கேரள முதல்வர்

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்து துறைகளையும் மத்திய அரசு கைவிடுவதையே உணர்த்துகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கேரள முதல்வர் கூறியதாவது, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்குமான திட்டங்களாக உள்ளது.

இதன்மூலம் அனைத்து துறைகளையும் மத்திய அரசு கைவிடுவதையே உணர்த்துகிறது. மேலும், இது நாட்டை முழுவதுமாக வணிக கண்ணோட்டத்தில் பார்ப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x