டெல்லி விவசாயிகள் போராட்டம் – ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது குறித்து ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் ட்விட்டரில் பரவி வருகின்றன. விவசாயிகளை அரசு படுகொலை செய்கிறது என்ற ரீதியிலான பதிவுகளும் பரவி வருகின்றன. இப்பதிவுகளில் வதந்திகள் பரப்பப்படுவதுடன் அரசின் மீது அவதூறு விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும் எனவே இது போன்ற 250 பதிவுகளையும் இவை இடப்பட்ட கணக்குகளையும் நீக்க ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படாத நிலையில் தற்போது ட்விட்டருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவதூறு பதிவுகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.