கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் – தமிழக அரசு
பிப்ரவரி 8 -ம் தேதி திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கல்லூரிகள் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், கல்லூரிகளில் கிருமிநாசினி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் கல்லூரிகள் திறப்பதில் கூடுதல் தாமதம் ஏற்பட்டதால், பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.