காவிரி ஆற்றில் வந்த முதலை.. வாலை பிடித்து விளையாடிய இளைஞர்கள்..?
திருச்சியில் இளைஞர்கள் முதலையை பிடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் குட்டி முதலை ஒன்றின் வாலை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அதோடு விளையாடியுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மான், முயல், காட்டுப்பன்றி வரிசையில் தற்போது முதலை வேட்டையும் நடைபெறலாம் என வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே முதலையை இளைஞர்கள் அடித்து சமைத்து சாப்பிட்டார்களா? அல்லது இறந்து கிடந்த முதலையை நீரில் இழுத்துச் சென்று விளையாடினார்களா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.