சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா(29). இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் அவர்களின் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த திடீர் முடிவு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x