குழாய் எரிவாயு திட்டம் ஐரோப்பாவுக்கு தேவை
ரஷ்யாவில் இருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்துக்கு, ஐரோப்பிய யூனியன் இடையூறு செய்யக்கூடாது’ என்று ஆஸ்திரிய நாட்டின் தலைவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பால்டிக் கடல் அடிப்பகுதியில் குழாய் பதிக்கப்பட வேண்டும்.
இந்த திட்டத்துக்கு அரசியல் காரணங்களால் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘குழாய் எரிவாயு வரும் பட்சத்தில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்; அது நேட்டோ அமைப்பிலும் பிரச்னையை ஏற்படுத்தும்’ என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு.
தற்போது ரஷ்யாவில், அரசு எதிர்ப்பாளரான அலெக்சி நாவல்னி கைது செய்யப்பட்ட விவகாரத்தை, குழாய் எரிவாயு திட்டத்துடன் இணைத்து, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பேச தொடங்கியுள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரிய தலைவர் செபாஸ்டியன் குர்ஸ் கூறுகையில், ‘குழாய் எரிவாயு திட்டம், ஐரோப்பிய திட்டம். இது ரஷ்யர்களுக்கான திட்டம் என்பது தவறு. நாவல்னி பிரச்னையால் குழாய் எரிவாயு திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் இடையூறு செய்யக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.