அல் ஜஸீரா நிருபர் 4 ஆண்டுக்கு பி்ன் ரிலீஸ்
எகிப்து நாட்டில் நான்காண்டுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட அல் ஜஸீரா செய்தியாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான எகிப்தில், நான்காண்டுக்கு முன் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோது, கத்தார் நாட்டை தலைமையிடமாக கொண்ட அல் ஜஸீரா தொலைக்காட்சியில் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த எகிப்து அரசு, செய்தியாளராக பணியாற்றிய, மெஹ்மூத் உசேன் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தது. இவரும் எகிப்து நாட்டை சேர்ந்தவர் தான்.
பொய் செய்தி பரப்புவதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்ந்ததாகவும், வெளிநாட்டு நிதி பெற்றதாகவும் வழக்குகள் பதியப்பட்டன.
இந்நிலையில், கத்தார் நாட்டுக்கும், சவுதி தலைமையிலான அரபு நாடுகளுக்கும் இடையே இருந்த மோதல் சூழல் மறைந்து, நல்லுறவு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மெஹ்மூத் உசேன் விடுவிக்கப்பட்டுள்ளார்.