அரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது..
அரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பிறந்தவரான செங் லீ, சிறு வயதில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றார். பின்னர், 2012-ம் ஆண்டில், சீனாவில் இயங்கிவரும் சி.ஜி.டி.என். சர்வதேச ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் சேனலில் பத்திரிகையாளராக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் சென்ற ஆண்டு, சீனாவின் அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் செங் லீயும் ஒருவர் ஆவார். இந்நிலையில் 6 மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த செங் லீ இன்று (பிப்ரவரி 8) சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாதாக, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரைஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.