தமிழகத்தில் முதலீடு செய்ய, முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு..

தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஃபெடக்ஸ் (Fedex) உள்ளிட்ட 2 லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கும், சவுதி அரம்கோ (Saudi Aramco) உள்ளிட்ட 3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்த கடிதத்தில் தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களை முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தேவைக்கு ஏற்ப அரசு ஊக்க சலுகைகளை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்