பொள்ளாச்சி வழக்கில் ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது – முக.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ தற்போது மேலும் மூவரை கைது செய்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அ.தி.மு.கவினர் உட்பட, சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்படவேண்டும்.
சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் இரண்டு பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.