கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலி அதிபர்..
சிலியில் கொரோனா தொற்றால் 19 ஆயிரத்துக்கு அதிகமானோர் மரணத்தை தழுவி இருக்கின்றனர்.
கடந்த 3-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் பைசர் மற்றும் சீனாவின் சினோவாக் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு தீவிரமாக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு சினோவாக் தடுப்பூசி போடப்பட்டது.
அதிபருக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை அரசின் டுவிட்டர் தளத்தில் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. இந்த தடுப்பூசி திட்டத்தை தொடர்வோம் என கூறியுள்ள செபாஸ்டியன், 65 முதல் 70 வயது வரையிலானவர்களுக்கு இந்த வாரம் தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவித்தார்.