பால் வியாபாரத்தை கவனிக்க ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி..?

மராட்டிய மாநிலத்தில் விவசாயி ஒருவர் வணிக நோக்கத்துக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

விவசாயி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும், இயலாமையும் தான். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் கடனில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மராட்டிய மாநிலம் பிவாண்டி நகரை சேர்ந்த விவசாயியும், பால் வியாபாரியுமான ஜனார்த்தன் போயர் என்பவர் ₹30 கோடி செலவில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி உள்ளார். மேலும் இவர் நில விற்பனை, கட்டுமான தொழிலும் செய்து வருகிறார்.

பிவாண்டி பகுதியின் முக்கிய தொழில் முனைவோராக கருதப்படும் ஜனார்த்தன் அடிக்கடி குஜராத், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்வார். பயண நேரத்தை குறைத்து தொழிலில் கூடுதல் வருமானம் ஈட்ட ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார்.

இதற்காக தனது வீ்ட்டுக்கு அருகே சுமார் 2½ ஏக்கர் நிலத்தில் ஹெலிபேட், பைலட் அறை தொழில்நுட்ப அறை ஆகியவற்றை அமைத்து உள்ளார். இப்போது ஊர் முழுக்க ஜனார்த்தன் பெயரில் ஹெலிகாப்டர் பற்றிய செய்தியை பேசும் பொருளாக உள்ளது.

இதுபற்றி விவசாயி கூறுகையில், “எனது வணிக பயன்பாட்டுக்காக நான் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. வணிகத்தை போலவே எனது பால் வியபாபாரத்தையும் கவனித்து கொள்ள வேண்டும். அதற்காக தான் நான் ஒரு ஹெலிகாப்டைரை வாங்கி இருக்கிறேன்” என்றார்.

மராட்டிய மாநிலம் பிவாண்டி செல்வ செழிப்புமிக்க பகுதியாக கருதப்படு்கிறது. இங்கு முக்கிய தொழில் அதிபர்கள் வசித்து வருகின்றனர். பிவாண்டியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் காடிலாக் கார் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x