என்னது செப். 30 வரை ரயில்கள் ரத்தா?

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு ரயில்வே துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு ரயில்வே துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற எந்தவொரு புதிய அறிவிப்பும் ரயில்வே துறை சார்பில் வெளியிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. எனினும், சிறப்பு மற்றும் விரைவு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.