ஆப்கன் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 ஆயில் டாங்கர்கள் எரிந்து நாசம்..
ஆப்கன் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 ஆயில் டாங்கர்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் 60 பேர் காயமடைந்தனர்.
ஆப்கன் ஈரான் எல்லையில் உள்ள பகுதி இஸ்லாம் குவாலா ஆனது, லட்சகணக்கான ஆப்கானிஸ்தானியர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அமெரிக்க அளித்துள்ள சிறப்பு சலுகை மூலம், இந்த வழியாக தான் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை ஆப்கன் இறக்குமதி செய்கிறது. தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.
இந்த பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில், இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் ஏற்றி வந்த 500 டிரக்குகள் எரிந்து நாசமாகியது சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. 60 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தீவிபத்து காரணமாக ஈரானில் இருந்து வரும் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் ஆப்கனின் ஹீரட் நகரம் இருளில் மூழ்கியது. தீவிபத்து காரணமாக 50 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.