மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா ; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்காக புதுவை சட்டசபை நாளை கூடுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது காங்கிரசில் 9, திமுக 3, சுயேட்சை 1, என 13 பேர், எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக 3 என கூட்டணியில் மொத்தம் 14 ஆக இருக்கிறது. அதன்படி இன்றே நாராயணசாமி தலைமையிலான அரசு இன்றே மெஜாரிட்டியை இழந்துள்ளது.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏக்கள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியுமா? என்கிற காரசார விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் இன்றே பெரும் பரபரப்பு நிலவுகிறது.