ஈகுவேடாரில் உள்ள 3 சிறைச்சாலைகளில் கலவரம்.. 62 கைதிகள் பலி..
தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் உள்ள 3 சிறைச்சாலைகளில் இரு குழுக்களுக்கு இடையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் போராடி அவர்களைக் கட்டுப்படுத்தினர்,
மேலும் அவர்களுக்கு உதவ இராணுவம் நிறுத்தப்பட்டது. ஆனால் கலவரத்தில் மொத்தம் 62 கைதிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தால் கலக்கமடைந்த சிறைவாசிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஈக்வடாரின் மேற்கு துறைமுக நகரமான குயாகுவில் சிறைக்கு வெளியே தகவல்களுக்காக காத்திருந்தனர். அப்போது வெளியில் வந்த அதிகாரிகள் அங்கு மட்டும் 21 கைதிகள் இறந்ததாக தெரிவித்தனர்.
மேலும், தெற்கில் குவெங்கா -வில் உள்ள சிறைச்சாலையில் மேலும் 33 பேரும், தென் அமெரிக்க நாட்டின் மையத்தில் உள்ள லதகுங்கா-வில் 8 பேரும் இறந்ததாக அரசாங்கத்தின் எஸ்.என்.ஏ சிறை நிர்வாகக் குழுவின் இயக்குனர் எட்முண்டோ மோன்காயோ தெரிவித்துள்ளார்.
கிரிமினல் கும்பல்களுக்கு இடையேயான இந்த சண்டையில் பல கைதிகள் காயமடைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் பல போலீசாரும் காயமடைந்தனர் என்று மோன்காயோ கூறினார்.
ஆனால் பாதுகாப்பு வீரர்கள் மத்தியில் எந்த மரணமும் ஏற்படவில்லை.