வாரத்துக்கு ஒரு முறை இந்த காயை சாப்பிடுங்களேன்..

உணவுகளில் காய்கறிகள் மிக முக்கியம். அதிலும் பீர்க்கங்காய் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும். அந்த அளவுக்கு அதில் பல பலன்கள் உள்ளன. 

நன்மைகள்: 

* ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து, அதனுடன் சிறிது வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி, காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால், மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும். 

* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் ரத்தக் கசிவு நீங்கிக் காயம் ஆறும். 

* பீர்க்கங்காயை துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு சுவைக்காகப் போதிய உப்பு சேர்த்து, காலை, மாலையென இரு வேளை பருகி வருவதால், வயிற்றினுள் துன்பம் தருகிற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். 

* பீர்க்கங்காய் சாறு எடுத்து அரைடம்ளர் சாறுடன் போதிய இனிப்பு சேர்த்து, தினமும் இருவேளை குடித்து வருவதால், ஆஸ்துமா எனும் மூச்சு முட்டுதல் குணமாகும். 

* பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்துச் சேர்த்துத் பூசி வந்தால் தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும். 

* பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும். பிறகு, இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து தலைமுடிக்குத் தேய்த்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வருவதால் இளநரை தடை செய்யப்படுவதோடு, தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும். 

* பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியை சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு, தினம் இருவேளை சிறிதளவு உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். 

* பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட்டு வருவதால், சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும். 

* பீர்க்கங்கொடியின் இலையை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து நாள்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறி விடும். 

* பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிக்கட்டிகள் குணமாகும். 

* பீர்க்கங்காய் சாறு எடுத்து உடன் இனிப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்தத்தால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். 

* பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வருவதால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் சத்து கிடைக்கப்பெற்று கண் பார்வை தெளிவு பெறும். 

கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x