பாகிஸ்தானிலும் டிக்டாக் தடை?

பிரபல சீன மொபைல் செயலியான டிக்டாக்கை பாகிஸ்தானில் உடனடியாக தடை செய்யக் கோரி, லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “சமூக ஊடகங்களில் புகழைப் பெறுவதற்காக, பல பெண்களும் வீடியோ போடுகின்றனர். இந்த செயலி, ஆபாசத்தை பரப்புவதற்கான ஆதாரமாக மாறியுள்ளது. டிக்டாக்கில் அறிமுகமான நண்பர்கள் குழுவினரால் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதே செயலிக்கு, பங்களாதேஷ் மற்றும் மலேசியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிக்டாக் பயன்படுத்தி உயிரிழந்தது தொடர்பாக 10 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், டிக்டாக் தடை தொடர்பாக கோரிக்கை மனுவை விசாரிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் பட்சத்தில், சீன ஆதரவு நாடான பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.