எதிர்ப்பு சக்தி தரும் ஸ்பெஷல் மோர்… ஆவின் அசத்தல்

ஆவின் பால் நிறுவனம் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி மோர் உள்ளிட்ட, ஐந்து புதிய பொருட்களை, முதல்வர் பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
காலத்தின் தேவைக்கேற்ப, புதிய பால் பொருட்களை, ஆவின் நிறுவனம், அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், புதிதாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆவின் மோர், ‘சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி’ மற்றும் நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ‘டீ மேட்’ பால் ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், மக்களுக்கு பயன்படும் வகையில், இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போன்ற, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை சேர்த்து, புதிய ஆவின் மோர் தயாரிக்கப்படுகிறது.
இந்த மோர், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இது, 200 மி.லி., பாட்டில், 15 ரூபாய்க்கு விற்கப்படும். சாக்கோ, மேங்கோ லஸ்ஸிஆவின் நிறுவனம், சாதாரண லஸ்ஸி மற்றும், ‘புரோ பையோடிக்’ என்ற இரண்டு வகை லஸ்ஸிகளை, விற்பனை செய்து வருகிறது. ஆவின் மோர் மற்றும் தயிர், மக்கள் இடையே, வரவேற்பை பெற்றுள்ளன.