“பா.ஜ.வை தோற்கடித்தாலும் அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஐ அப்புறப்படுத்த முடியாது” – ராகுல் காந்தி
காங்.,-ல் உள்கட்சி தேர்தல் நடத்தியதால் சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர் என காங்.., முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: காங்., கட்சியில் மாணவர் இளைஞர் அணி தேர்தல் நடத்தப்பட்ட போது சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர்.காங்கிரசில் உள்கட்சி ஜனநாயகம் என கேட்பவர்கள் பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளை கேட்பதில்லை.
ஜனநாயக அமைப்புகளில் ஆர். எஸ். எஸ் தங்களின் ஆட்களையே நியமிக்கிறது. தேர்தலில் பா.ஜ.வை தோற்கடித்தாலும் அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் நபர்களை அப்புறப்படுத்த முடியாது. புதுச்சேரியில் முறைப்படி தேர்ந்தெடுத்த அரசை செயல்படவிடாமல் ஜனநாயக நெறிமுறைகள் தகர்க்கப்பட்டது. ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொண்ட கவர்னர் கிரண்பேடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.