“பா.ஜ.க தலைவர்களுக்கு திடீர் தமிழ்க் காதல் ஏன்..?” – வீரமணி கேள்வி
தமிழ்நாடு பெரியார் மண், திராவிட மண், சமூகநீதி மண் என்பதை எப்படியாவது மாற்றிவிட பல்வேறு உத்திகளையும், வித்தைகளையும் கைமுதலாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற ஆரியத்தின் அரசியல் வடிவம் இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு, வாக்காளர்களுக்கு வலை வீசிட இப்போது ஒரு புதிய முறை ஒன்றை வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டைப் பிடிக்க எண்ணும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைவர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் போன்ற பலரும் தமிழ்மொழி, திருக்குறள், தமிழ் இலக்கியத்தின் பாடல்கள், தமிழ் கலாசாரத்தின் பழைமை, பெருமை பற்றிப் பேசி, ‘அய்யோ, எங்களால் இந்த அழகிய தமிழ் மொழியைப் படிக்க முடியவில்லையே’, என்று கூறி, வானவில் போல் பல வண்ண வண்ண வேடிக்கைகளை விட்டுச் செல்லுகின்றனர்.
இவர்களுக்கு இப்போது திடீர் தமிழ்க் காதல் பீறிட்டுக் கிளம்பவேண்டியதன் அவசியம் என்ன? இந்த தமிழ்ப் பம்மாத்து வேடம் செல்லாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.