மதுகடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – கலால்துறை ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரியில் இருந்து மதுகடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என கலால்துறை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுவை, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இந்தநிலையில் புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தலை தடுக்க புதுவை கலால்துறையினர் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் புதுவை மற்றும் தமிழக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டம் முடிந்தவுடன் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு மதுபானம், சாராயம் கடத்தலை தடுக்க புதுவை, தமிழக மாநில போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது புதுச்சேரியில் மதுபானம் கடத்தலை தடுக்க மதுபானம், சாராயம் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானம், சாராயக்கடைகளில் தனிநபருக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே மதுபானங்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக மதுபானம் வாங்குபவர்கள் குறித்து கலால்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் மதுபான தொழிற்சாலைகள், அரசு வடி சாராய ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அங்கு தயாரிக்கப்படும் மதுபானம், சாராயம் ஆகியவற்றின் விவரம், விற்பனை செய்யப்படும் விவரங்களை கலால்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இவற்றை கண்காணிக்க புதுச்சேரி, காரைக்காலில் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு மதுபானம், சாராயம் ஆகியவற்றை கடத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மதுபான கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுக்கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x