“மக்களுக்கு தங்கள் வசதிக்கேற்ப தடுப்பூசி” – மத்திய சுகாதார அமைச்சகம்

தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, அவற்றின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வசதிப்படி வாரத்தின் எந்த ஒரு நாளிலும் 24 மணி நேரமும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் நேற்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி மத்திய சுகாதார அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பொதுமக்கள் தங்கள் வசதிப்படி எந்த நேரத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்”.

மேலும் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிப்பதற்காக நேர தடையை அரசு நீக்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x