+2 தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில், அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று இரட்டையர்கள் சாதித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இரட்டையர்களான மானசி மற்றும் மான்யா ஆகியோர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றில், பிளஸ் 2 படித்து தேர்வு எழுதினர். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இவர்கள் ஒரே மதிப்பெண்களை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். இருவரும் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தலா 98 மதிப்பெண்களும், இயற்பியல், வேதியியல், உடற்கல்வியில் ஆகிய பாடங்களில், தலா 95 மதிப்பெண்களும் பெற்று இருவரும் 98.5 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மானசி கூறுகையில், “ஒன்றாகவே படித்த நாங்கள், ஒரே மதிப்பெண்களை பெறுவோம் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. மான்யா என்னை விட அதிக மதிப்பெண் பெறுவார் என நினைத்தேன். இருவரும் ஒன்றாக இருப்பது குறித்து இதுவரை பேசியவர்கள், இனி எங்கள் நாங்கள் பெற்ற ஒரே மதிப்பெண் குறித்து பேசப்போகிறார்கள்” என்றார். மற்றொரு சகோதரியான மான்யா கூறுகையில், ‘பள்ளி தேர்வுகளில், நாங்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்றதில்லை’ என ஆச்சரியம் தெரிவித்தார்